ஹைவே – தி லேட் ரிவீவ்யு
மழை நேரம், ஆஃபீஸ் கட் , சுட சுட மதிய உணவு முடித்து டி.வி பார்க்க அமர்ந்தால் கேபிள் கரண்ட் இல்லை. என்ன பார்க்கலாம் என்று வீட்டில் தேடிய போது கிடைத்தது 1 வருடத்திற்கு முன்பு வாங்கிய , 2014 ல் வெளியான ஹைவே பட டி.வி.டி.
படம் பார்க்கும் முன் தெரிந்திருக்கவில்லை இப்படம் ரிவீவ்யு எழுதியே தீர வேண்டும் என்ற எண்ணத்தை துண்டும் என்று .
இப்படி ஆரம்பிக்கிறது அந்த படம்.
”வீட்டுக்கு வெளியே போகும் போதெல்லாம் கவனமா இருக்கணும், முன்பின் தெரியாதவங்க எல்லாம் மோசமானவங்க, அவங்ககிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்னு சொன்னீங்களே அப்பா ,
வீட்டுக்குள்ளேயும் பாதுகாப்பு இல்லை, இங்க இருக்கிறவங்களும் மோசமானவங்க, இங்கேயும் கவனமா இருக்கணும்னு ஏன் ஒரு முறை கூட சொல்லல?” என்று அப்பாவைப் பார்த்து கேட்கிறார் ஆலியா பட். கேட்ட கையோடு நான் கிளம்பறேன். திரும்ப வரமாட்டேன் என்கிறார்.
அந்த பணக்கார வீட்டின் இரும்புக் கதவுகள் திறக்கப்படுகின்றன.
அதிகார மையங்களுடன் நெருக்கமான உறவு கொண்டிருக்கும் தொழிலதிபரின் ஒரே மகள். திருமணத்துக்கு முதல் நாள் கொஞ்சம் சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டும் என்று தனது வருங்கால கணவரோடு வெளியே கிளம்புகிறவர் , சிலரால் கடத்தப்படுகிறார்.
கடத்தியவர்களில் சிலர் அவரது பின்புலம் தெரிந்து அச்சப்பட, ரந்தீர் ஹூடா மட்டும் நடப்பது நடக்கட்டும் என்று போலீசில் மாட்டாமல் இருக்க ஆலியாவுடன் வெவ்வேறு இடங்களுக்கு பயணிக்கிறார். இந்த பயணங்களில் தன்னை இனம் கண்டுகொள்கிறார் ஆலியா. ரந்தீரின் மென்முகம் ஒரு பக்கம் தெரிய, இன்னொரு பக்கம் தன்னையும் தனக்கான உலகத்தையும் கண்டடைகிறார். அவரை எதாவது பாலியல் விடுதியில் விற்றுவிட வேண்டும் என்று நினைக்கும் ரந்தீர் ஒரு கட்டத்தில் அவரை புரிந்து வீட்டுக்கு அனுப்ப முயல, மறுக்கிறார் ஆலியா.
“என்ன பண்ன போற? என்ன கல்யாணம் பண்ண போறியா? குழந்தை பெத்துக்க போறியா?” என்று கேட்கிறார் ரந்தீர். “அந்த மாதிரி எதுவும் திட்டமில்ல, உன் கூட இன்னும் கொஞ்ச நேரம் இருக்கணும் அவ்வளவுதான்” என்கிறார் ஆலியா.
”அதோ அந்த மலை என்னை கூப்பிடற மாதிரியே இருக்கு”. “அப்படியா அப்போ வா, போவோம்”. “நிஜமாவா?” “ஏன் வேற எதாவது திட்டம் இருக்கா?” என்று ஆலியாவின் தன்னுணர்வு செலுத்தும் இடங்களுக்கு எல்லாம் சேர்ந்து பயணிக்கிறார் ரந்தீர். ஆலியாவின் விருப்பம் போலவே ஒரு மலையில் வீடு எடுத்து வாழத் தொடங்கும் போது போலீஸ் ரந்தீரை சுட்டுக் கொன்று ஆலியாவை அவரது வீட்டுக்கு அனுப்புகிறது. 9 வயதாக இருக்கும் போதிலிருந்து உறவினரின் பாலியல் தொல்லைக்கு ஆளாகும் ஆலியாவால் வேரெரு உலகை கண்டடைந்த பின்னர் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. வீட்டை விட்டு வெளியேறி அந்த மலைவீட்டுக்கே வருகிறார்.
மனதை அழுத்தும் ரஹ்மானின் குரலில் ஒரு பாடலோடு படம் நிறைவடைகிறது.
வாழ்க்கை முழுவதிலும் ஒரு பெண், குடும்பம் இதர புறசூழல்கள் பொருட்டு எத்தனை சமரசங்களை செய்து கொள்ள வேண்டியிருக்கிறது? குடும்ப கௌரவத்தின் பொருட்டு தனது மகளுக்கு நேரும் கொடுமையை மறைக்கும் எத்தனை பெற்றோர்கள் இன்றும் இருக்கிறார்கள்? மகிழ்ச்சி, விடுதலை என்றால் என்னவென்றே அறியாத எத்தனை பெண்கள் இங்கு இருக்கிறார்கள்?
அவர்கள் எல்லோரிலும் ஒரு துளியாக பரதிபளிக்க பட்டிருந்தார் வீரா (ஆலியா).
வணிக ரீதியாக பெரிய அளவில் இப்படம் வெற்றி பெறவில்லை எனினும் , ரஹ்மானின் உயிரை உருக்கும் பின்ணணி இசையில் , இப்படம் இம்தியாஸ் அலியின் ஒரு அற்புதமான படைப்பு.
Latest posts by Poiya mozhi (see all)
- நாம் காப்பி அடிக்க வேண்டிய மழைநீர் பாதுகாப்பு திட்டம் - November 18, 2015
- விவசாயிகளின் சூப்பர் மார்க்கெட் - November 18, 2015
- Attention Dear Passport Users – You Passport might get invalid this November - November 17, 2015