நடிகர் சங்கம்
சங்கம்.
சங்கத்தை பங்கமாக கலாய்க்க வேண்டும் என்ற ஆவளோடு தேடிய போது கிடைத்தது இது.
நடிகர் சங்கத்திற்க்கு தேர்தல் என்பதால் இரண்டு அணியாக பிறிந்து ஒருவரை ஒருவர் திட்டுக்கொள்வது அனைத்து தொலைக்காட்சிகளிலும் நேரலையாக ஒளிபரப்பாகியது.
அப்படி என்னதான் திட்டிக் கொள்கிறார்கள் பார்ப்போமே என்று பார்த்தால் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.
இதில் சரத்குமாரை ஆதரித்து பேசிய சேரன் சரத்குமாரை புகழ்வதற்க்காக ஒரு அதிர்ச்சியான உண்மையை போட்டு உடைத்தார்.
அந்த பதிவு மக்கள் அறிய இங்கு :
நடிகர் சங்கம் ஐந்து கோடிரூபாய் கடனில் இருந்ததாகவும் அந்த கடனை அடைக்க அனைத்து நடிகர்களும் சேர்ந்து திரட்டிய நிதி ஒன்னரைகோடி ரூபாய் என்றும் மீதி மூன்றரை கோடி ரூபாயை சரத்குமார் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா பேங்க் மேனேஜரிடம் பேசி தள்ளுபடி செய்ய வைத்ததாகவும் கூறினார் சேரன்.
சாதாரன மனிதன் ஐந்தாயிரம், பத்தாயிரம் கடன் கேட்டால் ஆயிரம் செக்யூரிட்டி கேட்கும் அரசு வங்கிகள் நடிகர் சங்கத்திற்க்கு ஐந்துகோடி ரூபாயை எந்த செக்யூரிட்டியும் இல்லாமல் எப்படி கடனாக கொடுத்தது ?
ஒரு நடிகர் ஒரு படம் நடிக்க கோடிகளில் சம்பளம் பெறுகிறார் .
ஆனால் கோடிகளில் வருமானம் கொழிக்கும் ஒரு சங்கத்திற்க்கு அரசு வங்கி, கடன் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
ஏழை மக்கள் விவசாயத்திற்காகவும் , கல்விக்காகவும் , தன் பிள்ளைகள் திருமணத்திற்காகவும் வங்கி களிடமிருந்து பெற்ற கடனை ஒரு வேலை திருப்பி செலுத்த இயலாவிட்டால் வட்டிக்கு வட்டி போட்டு அவர்களை நய்யப்புடைந்து அவர்கள் வாழ்க்கையை முடமாக்கும் இவ் வங்கிகள் கோடிகளில் புரலும் நடிகர் சங்கத்திற்க்கும் மட்டும் கடணைத் தள்ளுபடி செய்தது ஏன்.
கட்டத் தவறிய பணத்திற்கு நடிகர் சங்கத்தின் சொத்தை ஜப்தி செய்து பணத்தை வசூல் செய்யாமல் , சரத் குமார் கேட்டுக்கொண்டார் என்பதற்க்காக அரசு பணத்தை தாரைவார்த்தை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்.
நடிகர்கள் ஒன்னரை கோடி வசூல் செய்ததுகூட துபாயில் போய் ஆட்டம் காட்டி மக்களிடம் வசூல் செய்த பணம்தான்.
அரசாங்கத்தின் அதிகப் படியான வரிச் சலுகை பெரும் துரையும் சினிமா துரை தான்.
கோடி கோடியாக வருமானம் ஈட்டியும் தான் சார்ந்த சங்கத்தின் கடனுக்கு ஒரு ரூபாய்கூட அவர்களின் சொந்த காசை போட்டு கடனை திருப்பிச் செலுத்தாமல் பேங்க்கிர்க்கு சங்கு ஊதியது எந்த வகையில் நியாயம்?
இதுபோன்ற நிகழ்வுகளை மக்கள் தீவிரமாக எதிர்க்க வேண்டும்
பொது நல வழக்கு சம்மந்தப்பட்ட வங்கியின் மீது தொடுக்கப்பட வேண்டும்.
Latest posts by Poiya mozhi (see all)
- நாம் காப்பி அடிக்க வேண்டிய மழைநீர் பாதுகாப்பு திட்டம் - November 18, 2015
- விவசாயிகளின் சூப்பர் மார்க்கெட் - November 18, 2015
- Attention Dear Passport Users – You Passport might get invalid this November - November 17, 2015